Freelancer / 2023 மே 03 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூயார்க் நகரத்தில் உள்ள மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆப் ஆர்ட், பேஷன் மற்றும் கேளிக்கை துறை நடத்தும் மெட் காலா 2023 நிகழ்வு தொடங்கியுள்ளது.
இந்த ஆண்டு மறைந்த ஆடை வடிவமைப்பாளர் கார்ல் லாகர்பெல்டுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இருந்தது. நிகழ்ச்சியில் இதனை த் தொடர்ந்து உலகளவில் உள்ள பிரபலங்கள் பலரும் வித்தியாசமான ஆடை அணிந்து நிகழ்வில் பங்கேற்று வருகின்றனர்.
அலியா பட், பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனாஸ், கிம் கர்தாஷியன், கெண்டல் ஜென்னர், ரிஹானா, ஜிகி ஹடிட், நவோமி காம்பெல், பிளாக்பிங்க்ஸ் ஜென்னி, பில்லி எலிஷ், லில்லி-ரோஸ் டெப், துயா போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
பிரபலங்கள் கண்ணைக்கவரும் ஆடைகளில் கண்களுக்கு விருந்தளித்தனர். கெண்டல் ஜென்னர் குளித்து கொண்டு இருக்கும் போது பாதியிலேயே வந்தது போல் ஒரு மெல்லிய மினி உடையை அணிந்து ஒய்யாரமாக வந்தார். மறுபுறம், பிரியங்கா சோப்ரா, ஒரு மெல்லிய கருப்பு உடையுடன் கோல்டன் ஹூப் காதணிகளுடன் அடர் சிவப்பு சட்டை உடையில் பிரமிக்க வைத்தார்.


3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago