Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
George / 2016 மார்ச் 24 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
நயன்தாராவுக்கு போட்டியாக வரத் துடிக்கும் கீர்த்தி சுரேஷ், இனி கவர்ச்சி பாதையில் செல்லலாமா என யோசிப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரஜினி முருகன் திரைப்படத்தின் மிகப் பெரிய வெற்றியால் விஜய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் கீர்த்தி சுரேஷ். இவர் நடித்து முடித்துள்ள சில திரைப்படங்கள் வெளிவர வேண்டியுள்ள சூழ்நிலையில், தற்போது புதிதாக எந்தத் திரைப்படங்களிலும் நடிப்பதற்கு சம்மதிக்காமல் இருக்கிறாராம்.
அதற்குக் காரணம் விஜய் திரைப்படம்தான் என்கிறார்கள். விஜய் திரைப்படம் நடித்து முடித்த பிறகு சம்பளத்தை உயர்த்தலாம் என்ற எண்ணம்தான் காரணம். தெலுங்கில் நடிக்கவும் பல வாய்ப்புகள் வருகிறதாம். ஆனால், எதற்கும் பிடி கொடுக்காமல் பேசுகிறார் என்று டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
தெலுங்கிலிருந்து வரும் வாய்ப்புகள் அனைத்தும் கீர்த்தி சுரேஷை கிளாமராக நடிக்கக் கேட்டதால்தான் கீர்த்தி அவர்கள் வாய்ப்பை ஏற்கத் தயங்குகிறார் என்கிறார்கள்.
தெலுங்கில் வட இந்திய நடிகைகள் மிகவும் தாராளமாக நடிக்கும் போது அவர்களுக்குப் போட்டியாக நடிக்கும் தென்னிந்திய நடிகைகள் கவரச்சிக் காட்டத் தயங்குவது வழக்கமான ஒன்றுதான்.
இருந்தாலும், சீக்கிரமே கீர்த்தி சுரேஷ் தெலுங்குப் திரைப்படங்களிலும் நடிக்க சம்மதம் தெரிவிப்பார் என டோலிவுட் வட்டாரங்களும் காத்துக் கொண்டிருக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
31 minute ago
1 hours ago