Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜனவரி 30 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது காதலரின் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறியுள்ளார் நடிகை ப்ரியா பவானி சங்கர்.
சமூகவலைத்தளத்தில் அவர் எழுதியுள்ளதாவது:
பத்து வருடங்களுக்கு முன்பு, சந்தோஷமான, நம்பிக்கையான, குறைவாகக் கவரும் விதத்தில், சுமாராக இருந்த என்னைக் காதலித்தபோது நான் ஆச்சர்யப்படவில்லை.
ஆனால் இப்போதுள்ள என்னிடம் நீ தொடர்ந்து இருக்க நினைத்ததில் தான் ஆச்சர்யப்படுகிறேன். நீ, நான் கேட்க மறந்த இசை. காயங்களை மறக்க புதிய காதலின் கிளர்ச்சி தேவையில்லை.
சூழ்நிலைக்கு மாறாத அன்பு போதும் என்றிருக்கும் பேராண்மை. எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தால் அவள் வாழ்க்கையில் உன்னை மாதிரி ஒரு ஆண் இருக்க வேண்டும் என்று நான் கடவுளைக் கேட்டுக்கொள்கிறேன்.
நட்சத்திரங்கள் கொண்ட என் வாழ்க்கையில் நீ தான் சூரிய ஒளி என்று கூறி பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.
மேயாத மான் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். பிறகு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய படங்களிலும் நடித்தார்.
மான்ஸ்டர் படத்துக்குப் பிறகு எஸ்.ஜே. சூர்யா - ப்ரியா பவானி சங்கர் ஜோடி, ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் பொம்மை படத்திலும் நடித்து வருகிறார்கள்.
பொம்மை படத்தின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து, ப்ரியா பவானி சங்கர் கொஞ்சம் சிம்ரன் போலவும் கொஞ்சம் த்ரிஷா போலவும் இருக்கிறார் அல்லவா என்று குறிப்பிட்டிருந்தார் எஸ்.ஜே. சூர்யா.
இதன்பிறகு ட்விட்டரில் அவர் தெரிவித்ததாவது: நடிகை ப்ரியா பவானி சங்கரிடம் நான் காதலைத் தெரிவித்ததாகவும் அதை அவர் நிராகரித்ததாகவும் சில முட்டாள்கள் தவறான செய்தியைப் பரப்பி வருகிறார்கள்.
மான்ஸ்டர் படம் முதல் அவர் என்னுடைய நல்ல நண்பர். நல்ல நடிகை அவர். அவ்வளவுதான். என்னை வெறுப்பேற்ற வேண்டாம், அடிப்படை ஆதாரமில்லாத அவதூறுகளைப் பரப்ப வேண்டாம் என்று கூறினார்.
இந்தச் சர்ச்சையை அடுத்து, தனது காதலரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை ப்ரியா பவானி சங்கர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
11 May 2025
11 May 2025
11 May 2025