Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 மார்ச் 22 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஜய்யின் ‘லியோ’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தி நடிகர் சஞ்சய் தத் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘கே.ஜி.எஃப் 2’ படம் மூலம் தென்னிந்தியாவிலும் அறிமுகமாகி இருக்கும் சஞ்சய் தத், இதில் முதன்மை வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். இதனிடையே, நேற்று (22) புதுடெல்லி, உ.பி, பஞ்சாப், ஹரியானா மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் நிலஅதிர்வு உணரப்பட்டது.
இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர். இந்த நிலையில் தற்போது காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கும் ‘லியோ’ படக்குழு அங்கு தங்களின் தற்போதைய நிலை குறித்த அப்டேட்டை கொடுத்திருக்கிறது. இது குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சந்திரமுகி படத்தில் பங்களாவிற்குள் செல்லும் வடிவேலு பயந்து நடுங்கும் வீடியோவை பகிர்ந்து ‘நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் நண்பா’ என்று பதிவிட்டு இருக்கிறது. மேலும் படத்தில் லோகேஷ்கனகராஜூடன் இணைந்து திரைக்கதை மற்றும் வசனத்தில் கவனம் செலுத்தும் ரத்னகுமார், ‘BLOOODY நிலநடுக்கம்’ என்று பதிவிட்டு இருக்கிறார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago