2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கீர்த்தியின் புது முயற்சி

J.A. George   / 2020 டிசெம்பர் 24 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 உடல் எடை வெகுவாக குறைந்து விட்டதால் மீண்டும் எடையை அதிகரிக்கும் முயற்சியில் உள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

ஹிந்தி திரைப்படத்திலிருந்து அழைப்பு வரவே அதை ஏற்று கோலிவுட்டில் திரைப்படங்கள் ஏதும் ஒப்புக்கொள்ளாமல் மும்பைக்கு பறந்தவர்  கீர்த்தி சுரேஷ்.

பொலிவுட் நடிகைகள் ஒல்லி தோற்றத்தில் இருக்க வேண்டும் என்று யாரோ அவருக்குச் சொல்ல அதைக் கேட்டு கடுமையான உணவுக் கட்டுப்பாடு, உடற் பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்தார். 

ஒரு கட்டத்தில் எடை குறைந்து ஒல்லியாகி முகம் ஒட்டிப்போய் இவர் கீர்த்தியா என்று கேட்கும் அளவுக்கு மெலிந்துவிட்டார். ஆனால் இவரை நடிக்க அழைத்துச் சென்ற பட நிறுவனம், கீர்த்தி மிகவும் ஒல்லியாகி விட்டார். ஒரு குழந்தையின் தாயாக பொருத்தமாக இருக்க மாட்டார் என்று வாய்ப்பை இரத்து செய்தது. 

விரக்தியடைந்த கீர்த்தி மீண்டும் கோலிவுட், டோலிவுட் பக்கம் திரும்பி வந்தார். இதையடுத்து அவர் உடலில் எடை போட தொடங்கி உள்ளார். முன்பிருந்ததை விட அவர் சற்று எடை கூடியிருக்கிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X