Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2023 மே 09 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கவர்ச்சிக்கு பெயர்போன நடிகை ஸ்ரேயா சரண் தற்போது திருமணம், குழந்தை என்று பிசியான பிறகு விருது நிகழ்ச்சி ஒன்றில் அணிந்திருந்த உடையைப் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
‘எனக்கு 20 உனக்கு 18’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா சரண். சிவாஜி படத்தில் இவருடைய நடிப்பை பார்த்த ரசிகர்கள் பெரும் வரவேற்பை அளித்திருந்தனர்.
இந்நிலையில் பிரபல டென்னிஸ் வீரரை திருமணம் செய்துகொண்ட நடிகை ஸ்ரேயா குழந்தை பெற்றுக்கொண்ட பிறகும் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஒருசில ஹிந்தி படங்களில் நடித்துவரும் இவர் நேற்று முன்தினம் மும்பை நகரில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.
அப்போது இவர் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான உடையை அணிந்திருந்தார். இந்தப் புகைப்படத்தைப்பார்த்த ரசிகர்கள் சிலர் இவருக்கு 40 வயது என்றால் நம்ப முடிகிறதா? என்று கருத்து பதிவு செய்துள்ளனர். இன்னும் சிலர் விருது நிகழ்ச்சியில் இவ்வளவு கவர்ச்சி தேவையா? என்றும் விமர்சித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .