2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

குஷ்புவின் பதிலடி

J.A. George   / 2023 மே 09 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை குஷ்பு திருமணத்துக்காக மதம் மாறினார் என்று திடீரென நெட்டிசன்கள் சமூக வலைதளங்களை பதிவு செய்து வரும் நிலையில் அதற்கு குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

எனது திருமணத்தை பற்றி கேள்வி கேட்பவர்கள், நான் என் கணவரை திருமணம் செய்ய மதம் மாறிவிட்டேன் என்று கூறுபவர்கள், தயவுசெய்து கொஞ்சம் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

நம் நாட்டில் இருக்கும் சிறப்பு திருமணம் சட்டம் குறித்து அவர்கள் கேள்விப்பட்டதே இல்லை என்பது துரதிஷ்டமே. திருமணத்திற்காக நான் மதம் மாறவும் இல்லை, மதம் மாற என்னை யாரும் வற்புறுத்தவும் இல்லை.

எனது 23 வருட திருமண நம்பிக்கை மரியாதை, சமத்துவம் மற்றும் அன்பின் அடிப்படையில் உருவானது என்று தெரிவித்துள்ளார். குஷ்புவின் இந்த பதிவு வைரல் ஆகி வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X