2025 நவம்பர் 03, திங்கட்கிழமை

‘கொம்பு சீவி’

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 07 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘கொம்பு சீவி’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதுடன், படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியான நிலையில், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Once Upon A Time In Usilampatti என்ற தலைப்புடன் ஆரம்பமாகும் இந்த 39 விநாடிகள் கொண்ட வீடியோவில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், சண்முக பாண்டியன் மாஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சண்முக பாண்டியன், சரத்குமார், காளி வெங்கட், கல்கி ராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில், பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவு, தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பில், இந்த படம் உருவாகியுள்ளது.

1996 ஆம் ஆண்டு உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, வைகை அணை பகுதியில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X