2025 மே 16, வெள்ளிக்கிழமை

சஞ்சிதாவின் இன்ப அதிர்ச்சி

George   / 2016 ஜனவரி 18 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்னோடு விளையாடு திரைப்படத்தில் மதயானைக்கூட்டம் கதிருக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை சஞ்சிதா ஷெட்டி, ரொமான்டிக் காட்சிகளில் இளசுகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் நடித்துள்ளதுடன் முத்தக்காட்சியிலும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதன்காரணமாக இந்தத் திரைப்படத்துக்குப்பிறகு கோலிவூட்டில் சஞ்சிதா ஷெட்டியின் மார்க்கெட் எகிறும் என்கிறார்கள்.
விதார்த் நடித்த கொள்ளைக்காரன் திரைப்படத்தில் தமிழுக்கு வந்த சஞ்சிதா ஷெட்டி, சூதுகவ்வும் திரைப்படத்தில் விஜயசேதுபதியின் கற்பனை காதலியாக நடித்தார். முதல் திரைப்படத்தில் கும்பப்பாங்காக நடித்தவர், இரண்டாவது திரைப்படத்தில் கவர்ச்சியாக நடித்து இளவட்டங்களை கவர்ந்தார். 

தற்போது கவர்ச்சியை முன்வைத்து என்னோடு விளையாடு, எங்கிட்ட மோதாதே, லவ் குரு, தேவதாஸ் பிரதர்ஸ் என பலத் திரைப்படங்களில் நடித்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.

இந்தத் திரைப்படங்களில் பிரபலமில்லாத ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தபோதும், ரொமான்ஸ் மற்றும் கவர்ச்சிக் காட்சிகளில் தூக்கலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறாராம். அதோடு ரொமான்ஸ் காட்சிகளில் ஓவர் டச்சிங் டச்சிங் கொடுத்து சாதாரண காட்சிகளைகூட கிளுகிளுப்பாக மாற்றி விடுகிறாராம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .