Janu / 2023 மே 30 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் 2005ல் திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. இந்தபடத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது.
இதில் ராகவாலாரன்ஸ், கங்கனாரணாவத், வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு இந்தபடத்தையும் இயக்கி உள்ளார்.
இந்த படத்திற்கு எம்.எம்கீரவாணி இசையமைக்கிறார். படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்களை அவ்வ போது சமூகவலைதளங்களில் படக்குழு வெளியிட்டுவந்தது.
இந்த நிலையில் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக புகைப்படங்கள் வெளியிட்டு நடிகை ராதிகா அறிவித்துள்ளார். மேலும், 'எனக்கு தங்கமோதிரம் மற்றும் விலையுயர்ந்த கடிகாரம் பரிசளித்த முதல் ஹீரோ ராகவா லாரன்ஸ்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .