2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

சமந்தாவின் பதிலடி

J.A. George   / 2022 மார்ச் 15 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பிரபலமானவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை பத்து வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் நான்கு வருடங்களிலேயே இவர்களின் திருமண வாழ்க்கை கசந்து போனது. சில மாதங்களுக்கு முன்னர்தான் இருவரும் விவாகரத்து பெற்றுக் கொள்வதாக அறிவித்தனர்.

இதனையடுத்து, சமந்தா திரைப்படங்களில் நடித்து வருகிறார். அத்துடன், சமூக வலைதளங்களில் தொடர்ந்து வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

அந்த வகையில் அண்மையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிக்கர்கள் ஆபாசமாக பதிவிட அதற்கு சமந்தா பதிலடி கொடுத்துள்ளார்.

“முதலில் ஒரு பெண்ணை அவள் அணியும் ஆடைகள், சமுதாயத்தில் அந்தஸ்து, நிறம் உள்ளிட்டவர்களிடம் வைத்து எடை போடுவதை நிறுத்தங்கள்” என கூறியுள்ளார்.

இவருடைய இந்த பதிலடி சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X