2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சமந்தாவின் புதிய தொழில்

Editorial   / 2018 மே 25 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமந்தா நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம், இரும்புத்திரை, நடிகையர் திலகம் என மூன்று படங்களும், தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளன. அடுத்தபடியாக, சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்துள்ள சீமராஜா வெளியாகவுள்ளது.

இந்நிலையில், தற்போது யூடர்ன் படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் பிஸியாக நடித்து வருகிறார் சமந்தா. இந்தப் படத்திலும், நடிகையர் திலகம் படத்தில் நடித்தது போலவே நிரூபர் வேடத்தில் தான் நடிக்கிறார்.

என்றாலும், இது அதைவிட அழுத்தமான வேடம். அதோடு தான், கதையின் நாயகி என்பதால், கூடுதல் ஆர்வத்துடன் இப்படத்தில் நடித்து வருகிறார் சமந்தா.

மேலும், பத்திரிகையாளரின் கதையான இந்த படத்தின் படப்பிடிப்பு, தற்போது ஐதராபாத்திலுள்ள டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

கன்னட யூடர்ன் படத்தை இயக்கிய பவன்குமார் இயக்கும் இந்தப் படத்தில், சமந்தாவுடன் ஆதி, ராகுல் ரவீந்திரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X