Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
George / 2017 மே 29 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலைப்பை பார்த்து தாறுமாறா யோசிக்காதீங்க...
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் “வடசென்னை” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தத் திரைப்படத்தில் முதலில் சமந்தா பின்னர் அமலாபோல் ஆகியோரும் ஒப்பந்தமாகியிருந்தனர்.
இந்த நிலையில், “வடசென்னை” திரைப்படத்துக்கு சமந்தாவுக்கு கோடி ரூபாய் சம்பளம் பேசியவர்கள், பின்னர் அமலாபோலுக்கு அதைவிட கொஞ்சம் குறைவாக பேசியதாகவும், இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு அதைவிட குறைவாக பேசியிருப்பதாகவும் காற்றுவாக்கில் ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.
இதுபற்றி ஐஸ்வர்யா ராஜேஷைக்கேட்டால், “எனது வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத யாரோதான் இப்படி வதந்தி பரப்பி விட்டுள்ளனர். என்னைப்பற்றி இதற்கு முன்பும் சில வதந்தி பரவியது. இப்போது இந்த மாதிரி பரவியிருக்கிறது. ஆனால், இந்த வதந்திகள் எல்லாமே உண்மைக்கு புறம்பானவை. அதனால் இதை யாரும் உண்மை என்று நம்பவேண்டாம்” என்கிறார்.
இப்போ சொல்லுங்க! தலைப்பு சரிதானே!
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
10 May 2025
10 May 2025