Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2020 ஏப்ரல் 18 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை,
தமிழில், ‘காதலில் விழுந்தேன்’ படத்தில் அறிமுகமான சுனைனா, அதைத்தொடர்ந்து
மாசிலாமணி, வம்சம், திருத்தணி, நீர்ப்பறவை, சமர், தெறி, கவலை வேண்டாம், எனை நோக்கி பாயும் தோட்டா, சில்லு கருப்பட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ‘டிரிப்'என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இது அதிரடி திகில் கதையம்சம் உள்ள படமாக தயாராகி உள்ளது. சுனைனா அதிரடி சண்டை காட்சிகளிலும் நடித்துள்ளார்.
நாயுடன் முறைத்தபடி நிற்கும் அவரது முதல் தோற்ற போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.‘டிரிப்’ படத்தில் பிரவீன், யோகிபாபு, கருணாகரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
டென்னிஸ் இயக்கி உள்ளார். சிலர் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு பயணப் படுகின்றனர். அங்கு அவர்கள் சந்திக்கும் பயங்கரங்களே கதை. இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது.
கொவிட்-19 இனால் படத்தை வெளியிட முடியவில்லை என்றும் வெளியாகும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
49 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
9 hours ago