Editorial / 2020 பெப்ரவரி 27 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷங்கரின் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் நகுல்.
பின்னர், காதலில் விழுந்தேன், மாசிலாமணி, தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
பிரபல நடிகை தேவயாணியின் தம்பியான நகுல், கடந்த 2016 ஆம் ஆண்டு ஸ்ருதி பாஸ்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் நடிகர் நகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, 'மனைவிக்கு டிரைவராக உள்ளேன். அடிமைத்தனம், சம்பளம் இல்லை, நல்ல உடை இல்லை, சாப்பாடு இல்லை... கொடுமைக்கார பாஸ், நம்புங்க மக்களே' என்று பதிவிட்டுள்ளார்.
இதை கண்ட அவரது மனைவி ஸ்ருதி, உங்களை விட நான் நன்றாக கார் ஓட்டுவேன் என்று உங்கள் அம்மா கூறியிருக்கிறார். அப்படி இருக்க போது எனக்கு எதுக்கு டிரைவர்.எல்லாம் நடிப்பு' என்று பதிலளித்துள்ளார்.
இதை கண்ட நெட்டிசன்கள்,இதேபோல் செல்ல சண்டைகளுடன் மகிழ்ச்சியாக இருங்கள் என்று கூறி வருகிறார்கள்.
நகுல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் அண்மையில் நடுவராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
7 minute ago
30 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
30 minute ago
33 minute ago