J.A. George / 2021 மார்ச் 16 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
சரவணன் நடித்து வரும் திரைப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க ஊர்வசி ரவுடேலா ஒப்பந்தமாகியுள்ளார்.
சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் நாயகனாக நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அவர் நடித்த விளம்பரங்களை இயக்கிய ஜேடி - ஜெர்ரி இந்தப் படத்தை இயக்கி வருகிறார்கள்.
இதில் சரவணனுக்கு நாயகியாகப் புதுமுகம் கீர்த்திகா திவாரி நடித்து வருகிறார். அவர் தவிர்த்து மற்றொரு நாயகி கதாபாத்திரம் இருப்பதாகவும், அதற்காக முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.
தற்போது அதில் ஊர்வசி ரவுடேலா ஒப்பந்தமாகி நடித்து வருவது உறுதியாகியுள்ளது.
இந்தத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக இருப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது
8 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
06 Nov 2025
06 Nov 2025