Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 செப்டெம்பர் 10 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அண்மையில் வெளியான அவரது "மதராஸி" திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதற்கு முன்னர் வெளியான "அமரன்" திரைப்படம் சிவகார்த்திகேயனை உச்சத்திற்குக் கொண்டு சேர்த்தது. "மதராஸி" படத்திற்குப் பிறகு, சிவகார்த்திகேயன் பல படங்களை கைவசம் வைத்து மிகவும் பிஸியான நடிகராக வலம் வருகிறார்.
அடுத்ததாக "பராசக்தி" திரைப்படம் திரைக்கு வர உள்ளது. மேலும், சிபி சக்கரவர்த்தியுடன் ஒரு படத்திலும், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். "குட் நைட்" பட இயக்குநர் விநாயக்குடன் அவர் நடிப்பதற்கான தகவல்களும் வெளியாகி வருகின்றன.
இன்று சிவகார்த்திகேயனை மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து பெருமைப்படுவதற்குக் காரணம் நடிகர் தனுஷ் தான். சின்னத்திரையில் ஆங்கராக ரசிகர்களை மகிழ்வித்த சிவகார்த்திகேயனை வெள்ளித்திரைக்கு அறிமுகப்படுத்திய பெருமை தனுஷையே சேரும்.
தனது "3" திரைப்படத்தில் சிவகார்த்திகேயனை ஒரு இரண்டாவது ஹீரோவாக நடிக்க வைத்து தனுஷ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அதுமட்டுமின்றி, சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும் வர வேண்டும் என்பதற்காக சில இயக்குநர்களிடம் அவருக்காக வாய்ப்பு கேட்டவரும் தனுஷ் தான்.
ஆரம்பத்தில் தனுஷும் சிவகார்த்திகேயனும் நல்ல நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். பல மேடைகளில் சிவகார்த்திகேயன் தனுஷைப் பற்றி பெருமையாகப் பேசியிருக்கிறார். தனுஷும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை மகிழ்ச்சியாகப் பார்த்து வருவதாக ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சிவகார்த்திகேயனைப் பற்றிய ஒரு பழைய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
"வருத்தப்படாத வாலிபர் சங்கம்" படத்தின் வெற்றி விழா சமயத்தில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த தனுஷ், மேடையில் சிவகார்த்திகேயனைப் பற்றிப் பெருமையாகப் பேசினார். அப்போது அவர், "அவர் எனக்குத் தம்பி, நண்பர், அதற்கும் மேல். அப்படித்தான் நான் சிவாவைப் பார்க்கிறேன்.
அவர் எந்த இடத்தில், எந்த கட்டத்தில், தோளில், கையில் என எது கொடுத்தாலும் அவர் கூடத்தான் நான் இருப்பேன். இன்னும் நீங்கள் பெரிய பெரிய இடத்திற்கு போகும்போது உங்கள் கூடவே தான் நான் இருப்பேன். நீங்கள் கொஞ்சம் நல்லவர், கொஞ்சம் கெட்டவர். எதற்காக இவ்வளவு அன்பை உங்கள் மேல் வைத்திருக்கிறேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நிறையவே இருக்கிறது. இதை மேடையில் தான் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. இப்போது தோணுச்சு, அதனால் சொல்லிவிட்டேன். தப்பாக நினைத்துக் கொள்ள வேண்டாம்" என்று சிவகார்த்திகேயனைப் புகழ்ந்து பேசியிருந்தார்.
15 minute ago
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
20 minute ago
1 hours ago