Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
George / 2017 ஜூன் 03 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
சினிமாவுக்கு இந்திய மத்திய அரசாங்கம் விதித்துள்ள 28% ஜி.எஸ்.டி. வரியை நீக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகுவேன்” என, நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி வரி ஜூலை 1ஆம் திகதிமுதல் அமுலுக்கு வருகின்றது. இதனால், திரையரங்குகளில் டிக்கெட் விலை உயரும் என்ற அச்சம் நிலவியுள்ளது. இதனால், சினிமா உலகமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகர் கமல் கூறியுள்ளார்.
“ஜி.எஸ்.டி வரியால் திரைப்படத்துறை பெரிதும் பாதிக்கப்படும். சினிமா சூதாட்டம் போன்றது அல்ல; சினிமா என்பது ஒரு கலை. திரைத்துறையை நம்பி ஏராளமானோர் உள்ளனர். சினிமாவை சரியாகவும் தவறாகவும் பயன்படுத்திய அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.
“ஜி.எஸ்.டி வரியை தேசிய அளவில் வெளியிடப்படும் ஹிந்தி திரைப்படங்களுக்கு நிகராக மாநிலங்களுக்கு விதிக்கக்கூடாது.
“ஹொலிவுட் திரைப்படத்திற்கு நிகராக இந்திய சினிமாவுக்கு ஜி.எஸ்டி வரிவிதிப்பதும் சரியல்ல. இதனால் வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய கலாசாரம் பாதிக்கப்படுகிறது. பிராந்திய மொழித் திரைப்படங்களின் வளர்ச்சியும் பின்தங்கிவிடுகிறது.
“சினிமா டிக்கெட்டுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் முடிவை கைவிடுவது பற்றி மத்திய அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்.
“வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகுவேன். இந்த அளவிலான ஜி.எஸ்.டி. வரியை ஹிந்தித் திரையுலகம் ஏற்றாலும் நாங்கள் ஏற்கமாட்டோம்” என, கமல்ஹாசன் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
25 minute ago
38 minute ago