2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சிம்பு ஜோடியாக ஹிந்தி நடிகை

J.A. George   / 2020 டிசெம்பர் 22 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கிய முதல் திரைப்படம் 'போடா போடி'. சிம்பு, வரலட்சுமி நடித்தனர். 

ஓரளவுக்கு வரவேற்பை பெற்ற இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது  உருவாகிறது. சிம்புவே ஹீரோவாக தொடர, நாயகியாக ஹிந்தி நடிகை ரித்திகா பால் நடிக்கிறார். 

ஆனால் விக்னேஷ் சிவன் இயக்கவில்லை. வேறு ஒருவர் இயக்க இருப்பதாக தயாரிப்பாளர் பதம் குமார் தெரிவித்துள்ளார். 

முதல்பாகம் போன்றே இரண்டாம் பாகமும் நடனத்தை மையப்படுத்தியே இருக்கும் என தெரிகிறது. அடுத்தாண்டு மே முதல் லண்டனில் முழு படத்தையும் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X