2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சிவகார்த்திகேயன் படத்தில் ’அவதார்’ கலைஞர்!

J.A. George   / 2022 டிசெம்பர் 20 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ‘அவதார்’ படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் சிலர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயலான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் பணிபுரிந்த ‘அவதார்’ படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் சிலர் இணைந்து உள்ளதாகவும் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகளை அவர்கள் கடந்த சில மாதங்களாக செய்து வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

அடுத்த ஆண்டு வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் பிரீத்தி சிங் நடித்துள்ளார். மேலும் இந்த இஷா கோபிகர், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X