J.A. George / 2022 ஜூன் 07 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
2019ம் ஆண்டு ஒந்து கதை ஹெல என்ற கன்னடத் திரைப்படத்தில் அறிமுகமானவர் தமிழ்நாட்டு நடிகையான பிரியங்கா அருள் மோகன். அதையடுத்து தெலுங்கில் இரண்டு திரைப்படங்களில் நடித்தவர், பின்னர் தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படத்தில் அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் போன்ற திரைப்படங்களில் நடித்த பிரியங்கா மோகன், அடுத்தபடியாக நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 169வது திரைப்படத்திலும், ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் தெலுங்குக்கு செல்லும் பிரியங்கா மோகன், மகேஷ்பாபு நடிக்கும் புதிய திரைப்படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு தெலுங்கில் நானி, சர்வானந்துடன் ஜோடி சேர்ந்தவர், இப்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகருடன் இணைந்திருப்பதால் டோலிவுட்டில் முன்வரிசை நடிகை பட்டியலில் இணைந்திருக்கிறார் பிரியங்கா மோகன்.
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago