J.A. George / 2020 டிசெம்பர் 16 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாமி 2 திரைப்படத்தைத் தொடர்ந்து ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் சூர்யாவின் 39ஆவது படத்தை ஹரி இயக்க இருப்பதாக மார்ச் மாதம் அறிவிப்பு வெளியானது.
'அருவா' என தலைப்பு வைக்கப்பட்டு, இமான் இசையமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். கொரோனா ஊரடங்கால் திரைத்துறை பாதிக்கப்பட, அருவா திரைப்பட சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைத்துக் கொள்வதாகவும் இயக்குநர் ஹரி அறிவித்தார்.
இந்த சூழ்நிலையில் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் ரிலீஸ் பிரச்சினையில் சிக்கியது. இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது.
தொடர்ச்சியாக அருவா படம் கைவிடப்பட்டு, அடுத்ததாக தனது மைத்துனரும், நடிகருமான அருண் விஜய்யை வைத்து ஹரி புதிய படம் இயக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது ஹரி - அருண் விஜய் இணையும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அருண் விஜய் திரைப்படங்களிலேயே இது அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago