Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Princiya Dixci / 2016 ஜூலை 02 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சைமா 2016 விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகைக்கான விருது நானும் ரவுடிதான் படத்தில் நடித்தமைக்காக நயன்தாராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகருக்கான விருது ஐ படத்தில் நடித்தமைக்காக விக்ரமிற்கு வழங்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியத் திரையுலகினரைக் கௌரவிப்பதற்காக 'சைமா' விருது விழங்கப்படுகின்றது.
இந்த விருது வழங்கும் விழாவில் ஏராளமான தென்னிந்திய திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
விருது பெற்ற தமிழ் திரையுலகினர் பட்டியல்:
சிறந்த படம் : தனி ஒருவன்
சிறந்த இயக்குனர் : விக்னேஷ் சிவன் (நானும் ரவுடிதான்)
சிறந்த இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் (நானும் ரவுடிதான்)
சிறந்த பாடலாசிரியர் : வைரமுத்து (ஓ காதல் கண்மணி)
சிறந்த வில்லன் நடிகர் : அருண் விஜய் (என்னை அறிந்தால்)
சிறந்த காமெடி நடிகர் : ஆர்.ஜே. பாலாஜி (நானும் ரவுடிதான்)
சிறந்த அறிமுக நடிகர் : ஜி.வி. பிரகாஷ் (டார்லிங்)
சிறந்த அறிமுக நடிகை : கீர்த்தி சுரேஷ் (இது என்ன மாயம்)
சிறந்த துணை நடிகர் : பிரகாஷ் ராஜ் (ஓ காதல் கண்மணி)
சிறந்த துணை நடிகை : ராதிகா சரத்குமார் (தங்கமகன்)
சிறந்த பின்னணிப் பாடகர் : அனிருத் (படம்: நானும் ரவுடிதான்)
சிறந்த பின்னணிப் பாடகி : ஸ்வேதா மோகன் ( படம்: தங்கமகன்)
சிறந்த விமர்சக நடிகர் : ஜெயம் ரவி (தனி ஒருவன்)
சிறந்த விமர்சக நடிகை : நித்யா மேனன் (ஓ காதல் கண்மணி)
வாழ்நாள் சாதனையாளர் விருது : பழம்பெரும் பாடகி எஸ்.ஜானகி மற்றும் பழம்பெரும் தயாரிப்பாளர், இயக்குனர் பஞ்சு அருணாச்சலம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago