Freelancer / 2026 ஏப்ரல் 24 , பி.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஜய் நடிப்பில் உருவாகியிருந்த ஜனநாயகன் திரைப்படம் சமீபத்தில் லீக் ஆகியிருந்தது. இந்த விவகாரத்தில், தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கத்திலிருந்து, ஜனநாயகன் திரைப்பட தொகுப்பாளர் பிரதீப் ராகவ் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
படம் லீக் ஆன விஷயம் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு சிலரை கைதும் செய்திருந்தது.
இப்படி இருக்கையில் தற்போது திரைப்பட தொகுப்பாளர் பிரதீப் ராகவ், சங்கத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
இது குறித்து தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,
"படத்தொகுப்பாளர் பிரதீப் E. ராகவ் தென்னிந்திய திரைபடத் தொகுப்பாளர் சங்கத்தின் சட்ட விதிகளை மதிக்காமல் தொடர்ந்து ஜனநாயகன் உட்பட தான் பணியாற்றும் அனைத்து திரைப்படங்களுக்கும் சங்க உறுப்பினர் அல்லாதவர்களை உதவியாளராக பயன்படுத்துவது சங்க செயற்குழு முன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு சங்க சட்ட விதிகளுக்கு எதிரானது. மேலும் 'ஜனநாயகன்" திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாக நேரடியாக பிரதீப் E. ராகவ் காரணம் இல்லை என்றாலும், அவரது கவனக்குறைவே காரணமாக அமைந்துள்ளது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த நிலை தொடர்ந்தால் திரைப்பட துறையே செயலிழந்து போகும் அபாயம் உள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கும் கடமை தென்னிந்திய திரைபடத் தொகுப்பாளர் சங்கத்திற்கு உள்ளது.
திரைத்துறையின் பாதுகாப்பு மற்றும் சங்கத்தின் மாண்பை காப்பாற்ற வேண்டி 17.04.2026 அன்று நடந்த அவசர செயற்குழு கூட்டத்தில், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னணி முன்னிலையில் படத்தொகுப்பாளர்கள் கலந்தாலோசிக்கப்பட்ட கருத்துக்களை கவனத்தில் கொண்டு பிரதீப் E ராகவ் தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கம் "இடை நீக்கம்" செய்து இந்த அறிவிப்பை வெளியிடுகிறது. இந்த இடை நீக்க காலத்தில் சங்கம் பிரதீப் E. ராகவ் எந்தவிதமான ஒத்துழைப்பும் வழங்காது எனவும், மேலும் சகோதர சங்கங்கள் இந்த அறிவிப்புக்கு முழு ஆதரவு தருமாறும் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. R
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago