Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 நவம்பர் 08 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
திகோ குரூப் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் உறவினரும் முன்னாள் பிரதி அமைச்சரும் மூத்த நடிகருமான ஜீவன் குமாரதுங்க இயக்கிய ‘ஜீவா’ திரைப்படத்துக்கு,நிதியுதவி வழங்கியமை குறித்து, குற்றப் புலனாய்வு திணைக்களம் (சீ.ஐ. டி) வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
ஜீவன் குமாரதுங்க, அவரது மனைவி ஷெரின் குமாரதுங்க ஆகியோர், கடந்த சனிக்கிழமை சீ.ஐ.டிக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதோடு, பிரபல கலைஞர் சங்கீதா வீரரத்னவிடம் திங்கட்கிழமை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அவர்களிடம் சீ.ஐ.டியினரால் ஐந்து மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சங்கீதா மற்றும் ஜீவன் ஆகியோரை முக்கிய கதாபாத்திரங்களாக வைத்து 'ஜீவா' படத்தை திலினி தயாரித்துள்ளதாகவும், திலினி மோசடியாக சம்பாதித்த பணத்தினால் கலைஞர்களுக்குச் செலவிடப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, திலினியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் செமினி இட்டமல்கொட, பூர்ணிகா பீரிஸ் மற்றும் பேஷல மனோஜ் உள்ளிட்ட பல நடிகர்களிடமும் சீ.ஐ.டியினர் வாக்குமூலம் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
12 minute ago
44 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
44 minute ago
46 minute ago