J.A. George / 2023 நவம்பர் 14 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் ஜெயம்ரவி நடித்திருக்கும் படம் 'சைரன்'. கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். யோகிபாபு, சமுத்திரகனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
குடும்ப அம்சங்களுடன் ஆக்ஷன் திரில்லராக பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயம்ரவி இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க செல்வ குமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகியது.
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் சைரன் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்த டீசர் படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளதுடன், இந்த படம் டிசெம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
25 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
3 hours ago