2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

’டான்’ தொடர்பில் வெளியான அதிரடி அறிவிப்பு!

J.A. George   / 2022 ஜனவரி 31 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ’டான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடக்ஷன் முடிவடைந்தது.

இந்தத் திரைப்படம் பெப்ரவரி 14ஆம் திகதி காதலர் தினத்தில் வெளியாகும் என்று செய்தி வெளியானது.

இந்த நிலையில் தற்போது ’டான்’திரைப்படம் மார்ச் 25ஆம் திகதி  வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் டுவிட்டர் பக்கத்தில் அட்டகாசமான வீடியோ உடன் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டு உள்ளதுடன், திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

’டான்’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டதை அடுத்து அவரது ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X