2025 மே 16, வெள்ளிக்கிழமை

டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன்

George   / 2016 ஜனவரி 27 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் திரையுலகத்தில் எந்த ஒரு தொழில்நுட்ப மாற்றத்துக்கும் முன்னோடியாக இருப்பவர் கமல்ஹாசன். எவிட் எடிட்டிங், டிஜிட்டல் ஒளிப்பதிவு, ஆரோ ஒலியமைப்பு என பல விடயங்களை தமிழ்த் திரையுலகத்தில் அறிமுகப்படுத்தியவர். 

இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் சமூக வலைத்தளங்களில் மூழ்கிக் கொண்டிருக்க கொஞ்சம் தாமதமாகவே டுவிட்டரில் நுழைந்திருக்கிறார் கமல்ஹாசன். 

அவர் ஏற்கெனவே பேஸ்புக், யூடியூப் ஆகியவற்றில் முழு மூச்சுடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இருந்தாலும், டிவிட்டரில் நேற்று தான் தனி கணக்கு ஒன்றை ஆரம்பித்திருக்கிறார் கமல்ஹாசன். அவரின் டுவிட்டர் முகவரி இதுதான். https://twitter.com/ikamalhaasan

நேற்று இரவு ஆரம்பிக்கப்பட்ட அந்தக் கணக்கில் இதுவரை 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கமல்ஹாசனை தொடர ஆரம்பித்துள்ளனர். முதல் பதிவாக நமது நாட்டின் தேசிய கீதம் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். 

இளையராஜா இசையில் கமல்ஹாசன் பாடியுள்ள அந்த வீடியோவை தன்னுடைய முதல் பதிவாகப் போட்டுள்ளார்.

அத்துடன் இந்திய விடுதலைப் போராட்டம் இன்றைக்கும் தனித்துவத்துடன் விளங்குகிறது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். இரண்டாவது பதிவாக டுவிட்டருக்கு வந்துள்ள தன்னை வாழ்த்திய மகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நீண்ட இடைவெளி விட்டு தான் டுவிட்டரில் பதிவுகளைப் போடுவார். ஆனால், கமல்ஹாசன் அப்படி இடைவெளி விடமாட்டார் என எதிர்பார்க்கலாம். அஜீத், விஜய் ஆகியோர் டுவிட்டருக்கு வர மாட்டார்களா என அவர்களுடைய ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .