Freelancer / 2023 ஜூலை 18 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷா குப்தா ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். தற்போது அவர் திரைப்படங்களில் வாய்ப்புகள் பெறுவதற்காக கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.
குறிப்பாக அவர் அண்மையில் நீச்சல் உடையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்தது இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தங்க கலரில் ஜொலித்துக் கொண்டிருக்கும் போட்டோஷூட் புகைப்படங்கள் தர்ஷா குப்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த பதிவில் அவர் கேப்ஷன் ஆக ’அனைவரையும் நேசி எல்லோரிடமும் மரியாதையாக நடந்துகொள் ஆனால் உன் கொள்கையில் உறுதியாக இரு' என பதிவு செய்துள்ளார்
இதற்கு நெட்டிசன்கள் நீங்கள் போட்ட போட்டோவுக்கும் இந்த கருத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
2 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago