Editorial / 2020 மே 03 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
'ராஜா ராணி' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தொடர்ந்து 'தெறி, மெர்சல், பிகில்' என விஜய்யை வைத்து மூன்று ஹிட் படங்களை கொடுத்த அட்லீ, கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் என சொல்லுமளவுக்கு முன்னேறினார்.
இருந்தாலும், அவர் இயக்கும் திரைப்படங்களில் தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவு வைக்கிறார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது.
இந்த நிலையில், 'பிகில்' படம் வெளிவந்து ஆறு மாதங்கள் ஆகியும் அட்லீ இயக்கும் அடுத்த படம் என்ன என்பதில் தொடர் குழப்பம் நிலவுகிறது.
ஹிந்தியில் ஷாரூக்கானை சந்தித்து பேசிவிட்டார் என்றார்கள். தெலுங்கு நடிகர் ஜுனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை அட்லீ இயக்கப் போகிறார் என்று சொன்னார்கள்.
தொடர்ந்து விஜய்யின் அடுத்த படத்தை அட்லீ தான் இயக்குவார் என்றும் செய்தி வெளியானது. ஆனால், இப்போது வரை எதுவும் உறுதியாகவில்லை.
தொடர்ந்து விஜய்யை வைத்து மூன்று ஹிட் படங்களை இயக்கியவருக்கு அடுத்த படத்தை உறுதி செய்ய ஆறு மாதம் ஆகிறதா என்று கோடாம்பாக்கத்தில் கிசுகிசுக்கிறார்களாம்.
44 minute ago
48 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
48 minute ago
1 hours ago
4 hours ago