2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

தனுஷின் மனைவியை பார்த்து ’அந்த’ கேள்வியை கேட்கணும்

Editorial   / 2022 ஜனவரி 13 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனுஷை பார்ப்பவர்கள் எல்லாம் இரண்டு வளர்ந்த பையன்களுக்கு தந்தை என்று சொல்ல முடியாத அளவுக்கு இளமையாக இருக்கிறீர்களே என்கிறார்கள். உங்கள் மகன்களின் அண்ணன் போன்று தெரிகிறீர்கள் என்று பாராட்டுகிறார்கள்.

வாத்தி பட பூஜையில் தனுஷின் லுக்கை பார்த்து அசந்து போனவர்கள் பலர். ஆனால் தனுஷ் மட்டும் அல்ல அவரின் மனைவி ஐஸ்வர்யாவும் தான் அப்படியே இளமையாக இருக்கிறார்.

யாத்ரா, லிங்காவுக்கு அம்மா அல்ல அக்கா போன்று தெரிகிறார். ஃபிட்னஸில் தீவிரமாக இருக்கிறார்  ஐஸ்வர்யா
 

யோகா, தியானம் செய்வதுடன் அவ்வப்போது சைக்கிளிங்கும் செல்கிறார். ஆர்யா சைக்கிளிங் செல்வது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஐஸ்வர்யா தனுஷும் அடிக்கடி சைக்கிளிங் செல்கிறார்.

அதனால் இன்னும் எப்படி இப்படி இளமையாக இருக்கிறீர்கள் என்று தனுஷை பார்த்து கேட்பதற்கு முன்பு அவரின் மனைவியிடம் தான் கேட்க வேண்டும். தற்போது தலைப்பை மீண்டும் வாசிக்கவும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .