2024 ஒக்டோபர் 12, சனிக்கிழமை

தனுஷ் படத்தில் ’அர்ஜுன் ரெட்டி’ பட நடிகை

Mayu   / 2024 செப்டெம்பர் 24 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் தனுஷ் 4 வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகி வருவதாக அறிவிப்பு வெளியானது. இது தனுஷின் 52வது திரைப்படமாகும். தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

அருண்விஜய் வில்லனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், அசோக் செல்வன் ஆகியோர் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

நித்யா மேனனைத் தொடர்ந்து ஷாலினி பாண்டேவும் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிப்பது தற்போது உறுதி ஆகியிருக்கிறது. அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இவர் தமிழில் 100% காதல், கொரில்லா, சைலன்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 'மகாராஜ்' என்ற இந்திப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.




 

 


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .