Editorial / 2020 ஜூன் 15 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் இத்தாலி நாட்டைச் சேர்ந்த மைக்கல் கோல்சேல் என்பவரைக் காதலித்தார்.
அவருடன் சென்னையில் உறவினர் திருமண விழாவில் அப்பா கமல்ஹாசனுடன் கூட கலந்து கொண்டார். அதனால் மைக்கலுக்கும் ஸ்ருதிக்கும் விரைவில் திருமணம் நடக்கலாம் என்று கூட செய்தி வெளியானது.
ஆனால், கடந்த வருடம் மைக்கலுடனான காதலை முறித்துக் கொண்ட ஸ்ருதிஹாசன், மும்பையில் தனியாக வசித்து வருவதுடன் திரைப்படங்களில் நடிக்கும் போது மட்டும் சென்னைக்கு வருகிறார்.
இந்த நிலையில் சமூக ஊடகங்களில், “தற்போது யாரையாவது காதலிக்கிறீர்களா” என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளித்த ஸ்ருதி, “தற்போதைக்கு யாரையும் காதலிக்கவில்லை” என்று பதிலளித்துள்ளார்.
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026