Freelancer / 2023 ஒக்டோபர் 05 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

தனுஷ் நடித்து, இயக்கி வரும் 'D50’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
இந்த நிலையில் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த படம் குறித்த சூப்பர் அப்டேட்டை வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் உற்சாகமாகி உள்ளனர்.
'D50’ படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது என்றும் இன்னும் ஒரு சில நாட்களில் படப்பிடிப்பு முடிந்து விடும் என்றும் தனுஷ் தெரிவித்துள்ளார்.
அது மட்டும் இன்றி படப்பிடிப்பின் போது எடுத்த ஒரு புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.
இதில் தனுஷ் மொட்டை தலையுடன் நிற்பதை பார்க்கும்போது வேற லெவலில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் தனுஷ் உடன் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷான், துல்கர் சல்மான், அனிதா சுரேந்திரன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
வடசென்னை பின்னணியாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
9 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 Apr 2026