R.Tharaniya / 2025 ஜூன் 02 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னணி நடிகரான தனுஷ், தற்போது இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்துள்ளார். இதில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஜிம் சரப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஜூன் 20ஆம் திகதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் தனுஷ் தன்னை பற்றி வதந்தி பரப்புபவர்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.
அதாவது, நீங்கள் எனக்கு எதிராக எவ்வளவு வேணாலும் வதந்திகள் பரப்பலாம். எதிர்மறையான விஷயங்களை கிளப்பலாம். ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும் ஒன்றரை மாதம் முன்பு என்னைப்பற்றி நெகட்டிவிட்டி பரப்புங்க.
இங்க இருக்குறவங்க என் ரசிகர்கள் கிடையாது, 23 வருஷமா என் கூடவே வந்த வழித்துணைகள்.
நீங்க சும்மா ஒரு 4 வதந்தியை பரப்பி என்னை காலி பண்ணிடனும்னு நெனச்சா அதை விட முட்டாள்தனம் எதுவுமே கிடையாது. ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது" என்று ஆவேசமாக பேசினார்.

9 hours ago
16 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
16 Dec 2025