Editorial / 2025 ஒக்டோபர் 08 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருணம் செய்து ஏமாற்றி விட்டார். வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் தந்தை என ஜாய் கிரிசில்டா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருந்தார்.
மேலும், சமூக வலைத்தளங்களில் இருவருக்கும் இடையிலான தொடர்பு குறித்த படங்களையும் பகிர்ந்திருந்தார்.
காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரீஸில்டா புகார் ஒன்றை அளித்துள்ளார்.
வழக்கறிஞரும் மக்களவை உறுப்பினருமான சுதாவுடன் சென்று மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரியிடம் ஜாய் கிரிஸில்டா புகார் அளித்தார்.
அந்த புகாரில், "மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாகவும் தன்னைப் போல் 10 பெண்களை மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றியுள்ளார் என்றும் ஜாய் கிரிஸில்டா தெரிவித்துள்ளார்.
இந்த புகார் குறித்து பேசிய வழக்கறிஞர் சுதா, "மாதம்பட்டி ரங்கராஜ் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஜாய் கிரிஸில்டாவை ஏமாற்றியது போல தன்னையும் ஏமாற்றி விட்டதாக 10க்கும் மேற்பட்ட பெண்கள் எங்களிடம் தெரிவித்தனர். அந்த ஆவணங்களை சேகரித்து நீதிமன்றத்தில் கொடுக்கவுள்ளோம். அந்த பெண்களும் மாதம்பட்டி ரங்கராஜ் மீது வழக்கு கொடுக்க தயாராக உள்ளார்கள்.
இதனை தொடர்ந்து பேசிய ஜாய் கிரிஸில்டா, "எனக்கும் எனது குழந்தைக்கும் ஏதவது ஒன்று நடந்தால் அதற்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
8 minute ago
29 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
29 minute ago
53 minute ago