George / 2016 ஜூலை 26 , மு.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

பேராண்மை, பரதேசி போன்ற திரைப்படங்களில் வித்தியாசமான கெட்டப்புகளில் தன்ஷிகா, நடித்திருந்தாலும் கபாலியில் தான் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
குறிப்பாக, சண்டை காட்சியில் ஹொலிவுட் ஹீரோயின் அளவுக்கு அவர் நடித்திருப்பது தமிழ் சினிமா இயக்குநர்களை பிரமிக்க வைத்திருக்கிறது. தன்ஷிகாவா இப்படி‚ என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இப்படி யாருமே எதிர்பார்க்காத வகையில் ரஜினி திரைப்படத்திலேயே முக்கித்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்திருக்கும் தன்ஷிகாவிடம் தற்போது சில இயக்குநர்கள் அக்ஷன் கதைகளை சொல்லி வருகிறார்கள்.
அதனால் அடுத்தபடியாக தன்ஷிகாவின் சினிமா பயணம் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது.
இதற்கிடையே கைவசம் காலக்கூத்து, காத்தாடி, கிட்ணா உள்பட சில திரைப்படங்களை வைத்திருக்கிறார்.
கபாலியில் நடித்திருப்பதைப்பார்த்து விட்டு ஏராளமான ரசிகர்கள் அவரை பாராட்டியும், வாழ்த்தியும் வருகிறார்கள். இதனால், இதுவரையில்லாத அளவுக்கு மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயிருக்கிறார் தன்ஷிகா.
15 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago