Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஏப்ரல் 05 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமன்னாவும், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் காதலிப்பதாக பேசப்படுகிறது. ஆனால் அவர்கள் இதுவரை காதலை உறுதி செய்யவில்லை. புத்தாண்டை கொண்டாட கோவாவுக்கு சென்ற இடத்தில் விஜய் வர்மாவும், தமன்னாவுடன் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலானது. அதன் பிறகே அவர்கள் காதலிப்பதாக ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
விஜய் வர்மா நடித்திருக்கும் தஹாத் சீரீஸ் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அது தொடர்பாக மொத்த குழுவுக்கும் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்தார் தமன்னா. அந்த போஸ்ட்டை ஷேர் செய்ததற்கு நன்றி டமாட்டர்(தக்காளி) என தெரிவித்துள்ளார் விஜய். தமன்னாவுக்கு செல்லப் பெயர் தக்காளியா, பொருத்தமான பெயர் தான் என்கிறார்கள் ரசிகர்கள்.
தமன்னாவை காதலிக்கிறேன் என விஜய் வர்மா இதுவரை தெரிவித்தது இல்லை. இந்நிலையில் தமன்னாவை தக்காளி என்று அவர் அழைத்ததை வைத்து ரசிகர் ஒருவர் விஜய் வர்மாவிடம் உங்களுக்கு தக்காளியை பிடிக்குமா என்று கேட்டார். அதற்கு விஜய் வர்மாவோ, எனக்கு மிகவும் பிடிக்கும் என தக்காளி புகைப்படத்தை வெளியிட்டு பதில் அளித்துள்ளார். இது தக்காளியையா இல்லை தமன்னாவையா என்று ரசிகர்கள் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .