Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
J.A. George / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கின்போது கடந்த மார்ச் 22 ஆம் திகதி முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. பின்னர், கடந்த நவம்பர் 10 ஆம் திகதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமியை நடிகர் விஜய் சந்தித்துள்ளார். மாஸ்டர் திரைப்படத்தை வரும் 13 ஆம் திகதி வெளியிடவுள்ள நிலையில் இந்த திடீர் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதையொட்டி திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்குமாறு முதல்வரிடம் விஜய் கோரிக்கை வைத்தாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வருடனான இந்த சந்திப்பின்போது மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார், அமைச்சர் வேலுமணி உடன் இருந்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago
2 hours ago