2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தாயுடன் அரைகுறை கோலத்தில் கணவன்: மனைவி செய்த சம்பவம்

Editorial   / 2025 செப்டெம்பர் 21 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேசியாவில் தற்போது திரைப்படம் ஒன்று ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த திரைப்படம் மாமியார்-மருமகன் இடையேயான முறையற்ற உறவை பற்றியதாகும். இது உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டு என்பதால், திரைப்படம் இந்தோனேசியாவில் பேமஸாகி இருக்கிறது.

இந்தோனேசியாவை சேர்ந்த இளம்பெண் நோர்மா ரிஸ்மா. இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ரோஸி என்கிற இளைஞருடன் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னர் ஜாவா தீவில் உள்ள செரங் நகரத்தில் அவரது தாய் ரிஹானா உடன், தனது கணவரோடு நோர்மா வசித்து வந்தார்.

திருமணத்துக்குப் பிறகு எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. நோர்மா வேலைக்குச் சென்று குடும்ப செலவுகளுக்கு உதவி வந்தார். கணவர் ரோஸி அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார். தாய் ரிஹானா வீட்டில் வேலைகளையும் செய்து இருவருக்கும் உதவியாக இருந்திருக்கிறார்.

எல்லாம் சரியாக போய்க் கொண்டிருந்ததாக நினைத்த நிலையில்தான், ஆறு மாதங்களுக்குப் பிறகு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்தது. அதாவது நோர்மா வேலைக்கு செல்லும்போது கணவர் ரோஸிக்கு நைட் ஷிப்ட் இருக்கும். பகல் முழுவதும் ரோசியும் அவரது நோர்மாவின் தாயும், ரோஸின் மாமியாருமான ரிஹானாவும் தனியாக வீட்டில் இருந்திருக்கிறார்கள்.

அப்போது இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்திருக்கிறது. தொடக்கத்தில் ரோஸி மீது தனது தாய் ரிஹானா அதிகமாக கவனம் எடுத்துக் கொள்வது சாதாரண ஒன்று என்று நோர்மா நினைத்திருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் இவரை விட இவரது தாய் தான் அதிக கவனம் எடுத்துக் கொண்டிருக்கிறார். அதேபோல நோர்மா வேலைக்கு போகும் பொழுது அவரது கணவரும், அவரது தாயும் சேர்ந்து இருப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்து சொல்லி இருக்கிறார்கள். அப்போதும் இதை நோர்மா நம்பவில்லை.

வீட்டில் நடக்கும் நிகழ்வுகள், தனது தாய் தனது கணவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதையும், அவர் மீது கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வதையும், அக்கம் பக்கத்தினர் சொன்னதையும் சேர்த்து யோசித்த நோர்மாவுக்கு சந்தேகம் வலுத்திருக்கிறது. பின்னர் கணவரின் மொபைல் ஃபோனை எடுத்து அதில் உள்ள மெசேஜ்களை செக் செய்து பார்த்திருக்கிறார். கணவர் தனது தாய்க்கு பாலியல் ரீதியான மெசேஜ்களை அனுப்பியிருக்கிறார் என்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதன் பின்னர் சண்டை இருவருக்கும் இடையே வலுத்து இருக்கிறது. இப்படி போய்க்கொண்டிருந்த போது, ஒருநாள் வேலையில் இருந்து மதிய நேரத்தில் வீடு திரும்பிய நோர்மா சட்டென தனது தாயின் அறையை திறந்து பார்த்திருக்கிறார். அங்கு தனது கணவரும் தாயும் அரையும் குறையுமான ஆடையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இந்த சம்பவத்தை டிக் டாக் வீடியோ மூலம் வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான இந்த வீடியோ உலகம் முழுதும் பேசு பொருளானது.

இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து தான் தற்போது நோர்மா என்கிற பெயரில் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இந்தோனேசியா மக்களிடையே வரவேற்பு அதிகரித்திருப்பது தற்போது பேசுபொருளாகி இருக்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X