Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Mithuna / 2024 பெப்ரவரி 01 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
69 ஆவது பிலிம்பேர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் மூன்று பாலிவுட் திரைப்படங்கள் தலா 5 விருதுகளை பெற்று உள்ளன.
2024 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த எடிட்டிங் ஆகிய ஐந்து பிரிவுகளில் ’12த் பெயில்’ என்ற திரைப்படம் வென்றுள்ளது.
அதேபோல் ரன்பீர் கபூர் நடித்த ‘அனிமல்’ திரைப்படமும் 5 விருதுகளை வென்று உள்ளது. இந்த படம் சிறந்த நடிகர், சிறந்த இசை, சிறந்த பாடகர், சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த சவுண்ட் டிசைன் ஆகிய விருதுகளை வென்றுள்ளது.
அதேபோல் விக்கி கெளசல் நடித்த ‘சாம் பஹ்தூர்’ திரைப்படமும் ஐந்து பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது
மேலும் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான ’ஜவான்’ திரைப்படம் சிறந்த சண்டை பயிற்சியாளர் மற்றும் சிறந்த VFX விருதுகளை பெற்றுள்ளது. ஸ்டண்ட் பயிற்சியாளர் பிரிவில் விருதுகளை வென்றவர்களில் அனல் அரசும் ஒருவர்.
அதேபோல் ஷாருக்கான் நடித்த ’பதான்’ திரைப்படம் சிறந்த பின்னணி பாடகி விருதை பெற்றுள்ளது. இந்த படத்தில் பாடல் பாடிய ஷில்பா ராவ் என்பவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
59 minute ago
3 hours ago