2025 மே 09, வெள்ளிக்கிழமை

தல எப்பவும் தலதான்

Editorial   / 2018 ஜூன் 14 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள நடிகர்களில் விஜய், அஜித் இருவரைப் பற்றிய ஒரு சிறு தகவல் வந்தால்கூட, அது பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் செய்தியாக மாறிவிடுகிறது. அப்படி ஒரு தகவல், இன்று அஜித்தைப் பற்றி வெளிவந்திருக்கிறது.

அஜித்திடம் அன்ட்ராய்ட் ​அலைபேசி பயன்படுத்தும் பழக்கம் இல்லையாம். சாதாரண மொபைல் போன் மட்டும் தான் பயன்படுத்துகிறாராம்.

“உங்க எதிர்ல, பந்தாவான போன் வச்சி பேசறதுக்கே கூச்சமாக இருக்கிறது” என, படக்குழுவில் உள்ள பலரும் அவரிடம் தெரிவித்துள்ளார்கள். அதற்குப் பதிலளித்த அஜித், “உங்களுக்கு அந்தப ஃபோன் தேவைப்படுது, வைத்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கு வீட்டில் உள்ளவர்களுடன் பேசுவதற்கு இந்த ஃபோன் போதும், வட்ஸ்அப் பயன்படுத்தும் பழக்கமும் எனக்கில்லை” என்று சொல்லியிருக்கிறார்.

அப்படி என்றால், திரையுலகில் நடக்கும் விடயங்கள் அஜித்துக்கு எப்படி போய்ச்சேருகிறது என்று கேட்கிறீர்களா? அதற்கென அஜித்தைச் சுற்றி சிலர் இருக்கிறார்கள். தினமும் என்னென்ன நடக்கிறது. பத்திரிகைகளில் என்ன வருகிறது. சமூக வலைத்தளங்களில் என்ன விவாதிக்கிறார்கள் என்பதைத் தவறாமல் அவர்கள் அப்டேட் செய்துவிடுவார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X