Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜூலை 18 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
விக்ரம் நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’துருவ நட்சத்திரம்’ திரைப்படம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் பணிகள் தொடங்கிய நிலையில் தற்போது இந்த படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வரும் 19ஆம் திகதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த பாடலின் புரோமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்
வெறும் 19 வினாடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. His Name Is John என்ற இந்த பாடலை தாமரை எழுதியுள்ளார். ஹரிஸ் ஜெயராஜ் கம்போஸ் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி, விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா உள்பட பலர் நடிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
10 minute ago
14 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago
2 hours ago