Freelancer / 2023 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த ’இறைவன்’ திரைப்படத்தை செப்டம்பர் மாதம் இறுதி வாரத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
‘என்றென்றும் புன்னகை’ பட இயக்குனர் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் ’இறைவன்’.
இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
அண்மையில், இந்த படத்தின் பின்னணி இசையமைப்பு பணியை யுவன் சங்கர் ராஜா ஆரம்பித்ததாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், வரும் செப்டம்பர் இறுதி வாரத்தில் நபிகள் தினம் வருவதால், தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை தினத்தை பயன்படுத்திக்கொள்ள ’இறைவன்’ படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
செப்டம்பர் இறுதி வாரத்தில் 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட பிரபாஸ் நடித்த ’சலார்’ திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் அந்த படத்துடன் ’இறைவன்’ படம் மோதவுள்ளது.
இந்த படம் ரிலீஸ் திகதி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
42 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
50 minute ago
2 hours ago