Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 22 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொபைல் எண்ணுடன் மணப்பெண் தேவை என வீடியோ வெளியிட்டார் நடிகர் ஆர்யா, தற்போது வட்ஸ்அப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, “இப்போது தீவிரமாக நான் பெண் பார்க்க விரும்புகிறேன். வழக்கமாக உறவினர்கள், நண்பர்கள், வெப்சைட் மூலம் மணப்பெண்ணை தேடுவார்கள். நான் எனது செல்போன் எண்ணை வழங்குகிறேன். நான் உங்களுக்கு நல்ல கணவனாக இருப்பேன் என நம்பினால், என்னை 73301 73301 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளுங்கள். இது விளையாட்டுக்காக நான் செய்யவில்லை. எனக்கு எந்த நிபந்தனையோ எதிர்பார்ப்புகளோ கிடையாது. இது எனது வாழ்க்கை சம்பந்தப்பட்ட விடயம். உங்கள் அலைபேசி அழைப்புக்காக காத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
நீண்ட காலமாக, சிங்கிளாகச் சுற்றி, பிரியாணி விருந்து கொடுத்து ஜமாய்த்துக் கொண்டிருந்த நடிகர் ஆர்யா, திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதற்காகவே அவர், டுவிட்டரில் வித்தியாசமாக விளம்பரம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், ஆர்யாவின் டுவீட்டைப் பார்த்த ரசிகர்கள், “பேசாமல் நடிகை த்ரிஷாவுக்கு வாழ்க்கை கொடுக்கலாமே” ஆர்யா என்று ஐடியா கொடுத்துள்ளனர். இதைப் பார்த்த ஆர்யா, த்ரிஷாவை ப்ரொபோஸ் செய்துள்ளார்.
ஆனால், ஆர்யாவின் டுவீட்டைப் பார்த்த த்ரிஷா, அவரைக் கலாய்த்துள்ளார். இதைப் பார்த்த ஆர்யாவோ, “நீங்கள் என்னை எப்பொழுதுமே சீரியஸாக எடுப்பது இல்லை. இல்லையென்றால் இந்த நிலையில் நான் இருந்திருக்க மாட்டேன்” என்று, மறைமுகமாக ப்ரொபோஸ் செய்துள்ளார்.
12 minute ago
16 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
16 minute ago
2 hours ago