Shanmugan Murugavel / 2026 மே 05 , மு.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் தமிழ்நாட்டின் சட்டசபைத் தேர்தலில், மதுரை மத்திய தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் களமிறங்கிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (பி.டி.ஆர்), அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் களமிறங்கிய நடிகை குஷ்புவின் கணவரும் நடிகரும் இயக்குநருமான சுந்தர் சியை தமிழக வெற்றிக் கழகத்தின் வி.என்.எஸ். முஸ்தபா வீழ்த்தியுள்ளார்.
முஸ்தபா 63,414 வாக்குகளைப் பெற்று வென்ற நிலையில், பி.டி.ஆர் 44,286 வாக்குகளையும் சுந்தர் சி 33,538 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
குஷ்பு, பாரதிய ஜனதாக் கட்சியில் காணப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசனின் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்குவதிலிருந்து சுந்தர் சி விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
56 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago
4 hours ago