2021 ஜூன் 14, திங்கட்கிழமை

நடிகர் ஷாம் திடீர் கைது

Editorial   / 2020 ஜூலை 28 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

2001 ஆம் ஆண்டு வெளியான ‘12B' படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான ஷாம், அப்படத்தை தொடர்ந்து ‘இயற்கை’, ‘உள்ளம் கேட்குமே’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்ததோடு, தெலுங்கு சினிமாவிலும் முக்கியமான நடிகராக வலம் வந்தார்.

நடிப்பு மட்டும் இன்றி திரைப்பட தயாரிப்பாளராகவும் களம் இறங்கிய ஷாம், ‘6 மெழுகுவர்த்திகள்’ என்ற படத்தை தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்தார். 

தற்போது ‘உள்ளம் கேட்குமே’ படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து நடிக்க இருப்பதாகவும் ஷாம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நடிகர் ஷான் சென்னையில் உள்ள தனது வீட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் சுமார் 13 பேர் சேர்ந்து பணம் வைத்து சூதாடியதாகவும், அந்த தகவல் அறிந்த பொலிஸார் ஷாம் உள்ளிட்ட அங்கிருந்தவர்களை கைது செய்ததாகவும் கூறப்படுகிறது.

 கைது செய்யப்பட்ட ஷாம் சில மணி நேரங்களில் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது கசிந்திருக்கும் இந்த தகவலால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .