Ilango Bharathy / 2023 மே 22 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
அண்மையில் நடிகர் சரத் பாபு உடல் நலக் குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டன. கடந்த சில வாரங்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சரத்பாபு இன்று உயிரிழந்தார்.
72 வயதான நடிகர் சரத்பாபு சுமார் 50 வருடங்களாக திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் முள்ளும் மலரும், உதிரிபூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நெற்றிக்கண், வேலைக்காரன், அண்ணாமலை போன்ற பல படங்களில் நடித்தவர் சரத்பாபு. ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என தனக்கு கிடைக்கும் கதாப்பாத்திரங்கள் அனைத்திலும் முத்திரை பதித்துள்ளார்.
அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சரத்பாபு இறுதிச் சடங்கு சென்னை தி.நகரிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தகவல் வெளிவந்துள்ளது.
14 minute ago
25 minute ago
25 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
25 minute ago
25 minute ago
39 minute ago