2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

நடிகர் ராகவா லாரன்ஸிற்கு டாக்டர் பட்டம்

Freelancer   / 2022 ஜூலை 11 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறந்த சமூக சேவைக்காக டாக்டர் பட்டத்தை நடிகர் ராகவா லாரன்ஸிற்கு மனித உரிமைகள் ஆணையம் வழங்கியது.

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவின் பன்முகத் தன்மை கொண்ட கலைஞனாக உள்ளவர் ராகவா லாரன்ஸ்.

தமிழ் சினிமாவில் முனி, காஞ்சனா போன்ற திரைப்படங்களை ராகவா லாரன்ஸை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும்படி செய்தது.

சினிமாவைத் தாண்டி மக்கள் மத்தியில் அவர் பிரபலமாக அறியப்பட மற்றொரு காரணம் அவரின் உதவி செய்யும் குணம் தான். குறிப்பாக மாற்றுத்திறனாளி மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அவர் தொடர்ந்து உதவி வருகிறார். அவர்களுக்கென்று தனியாக இல்லங்கள் நடத்தி வருவதோடு அவர்களை கனிவோடு கவனித்துக்கொள்கிறார்.

சமூக சேவைகளை கௌரவிக்கும் விதமாக அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் இணைந்து அவருக்கு இந்த விருதை வழங்கி உள்ளனர்.

மேலும், ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன் படப்பிடிப்பில் இருப்பதால் டாக்டர் பட்டத்தை அவரது அம்மா பெற்றுக் கொண்டார். டாக்டர் பட்டம் பெற்றுள்ள ராகவா லாரன்ஸிற்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X