Editorial / 2020 ஜூன் 12 , மு.ப. 08:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் பரவும் அச்சம் காரணமாக பிரபல நடிகை மலைகா அரோரா வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
மணிரத்னம் இயக்கத்தில் தமிழ், இந்தியில் வெளியான ‘உயிரே’ திரைப்படத்தில் ‘தைய தைய தைய தையா’ என்ற பாடலுக்கு ஆடியவர், நடிகை மலைகா அரோரா.
பொலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை காதலித்து 1998ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட மலைகாவுக்கு அர்ஹான் என்ற மகன் இருக்கிறார்.
கடந்த சில வருடங்களுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து செய்தனர். தனியாக வசித்து வந்த நடிகை மலைகா அரோராவும் பிரபல தயாரிப்பாளர் போனிகபூரின் மகனுமான அர்ஜுன் கபூரும் காதலித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகை மலைகா மும்பை பாந்த்ரா பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது மகன் அர்ஹானுடன் வசித்து வருகிறார்.
இவர் வசிக்கும் இடம் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது குடியிருப்பில் உள்ள ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அடுக்குமாடி குடியிருப்புக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026